உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சைப் அலிகான்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சைப் அலிகான்

பாலிவுட்டின் பிரபல நடிகர் சைப் அலிகான். கடந்த 16ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சைப் அலிகான் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைப் அலிகான் உடலில் 6 காயங்கள் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடலில் இருந்து கத்தியின் ஒரு துண்டு அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 5 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சைப் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !