மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
253 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
253 days ago
கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது 15 ஆண்டு காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பிறகும் தான் நடித்த படங்களின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், கணவருடன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்கு சென்று விட்டு திரும்பினார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு நானும் ஆண்டனியும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் இப்போது பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. அதோடு நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் மூழ்கி இருப்பேன். அது எனது கணவருக்கு சங்கடமாக உள்ளது. என்றாலும் அவர் அதை குற்றம் குறை சொல்வதில்லை. என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்கிறார். அதனால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக செல்லும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
253 days ago
253 days ago