மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
249 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
249 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
249 days ago
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13ம் தேதி முதல் மகா கும்பமேளா விமர்சையாக நடந்து வருகிறது. சாதுக்களும், முனிவர்களும், அகோரிகளும் பிரபலங்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் குவிந்து வருகிறார்கள்.
இந்த விழாவில் பல அகோரிகள், குறிப்பாக பெண் அகோரிகள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். அந்த வரிசையில் கும்பமேளாவில் பூ, ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்த இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சிவப்பு ஆடையுடன் இளம் பெண் சாது போன்று வசீகரமான தோற்றத்தில் காட்சியளித்த அப்பெண் இப்போது மீடியாக்களை ஆக்கிரமித்துள்ளார். நிஜமான மோனலிசா போன்ற அவரது அழகும், கண்களும் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. இதனால் காட்சி ஊடகங்கள், யு-டியூப்பர்கள், செல்பி விரும்பிகள் மோனலிசாவை தேடத் தொடங்கினார். அவர் தங்கியிருந்த குடிலுக்கு வெளியில் அவர் எப்போது வெளியில் வருவார் என காத்திருக்க தொடங்கினர்.
இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படவே அவரது தந்தை மோனலிசாவை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டார். சொந்த ஊருக்கு வந்த மோனலிசா தனது அழகை மேலும் கூட்டிக் கொண்டு தனியாக யு டியூப் சேனல் தொடங்கி விட்டார். சில நாட்களிலேயே லட்சக் கணக்கானவர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் பல தொலைக்காட்சி சேனல்கள் மோனலிசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைக்க அவரது தந்தையிடம் பேசி உள்ளார். இதனால் விரைவில் மோனலிசா பாலிவுட் நடிகை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
249 days ago
249 days ago
249 days ago