மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
249 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
249 days ago
2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தெலுங்கு சினிமாவில் பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேற்றிரவே ஆந்திர முதல்வர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு அவர்களில் சிலர் தமிழ் சினிமாவில் விருதுகளை வாங்கிய அஜித் மற்றும் ஷோபனாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், இங்குள்ள சீனியர் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் அஜித்துக்கும், ஷோபனாவுக்கும் இன்னும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற சினிமா ரசிகர்களும் பகிர்ந்துள்ளார்கள்.
இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதகளைப் பெற்றவர்களை வாழ்த்துவதில் ஏன் இந்த பாரபட்சம் ?
249 days ago
249 days ago