மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
248 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
248 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாருக்கு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும் தெலுங்குத் திரையுலகத்திலிருந்து சில சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய் தேவரகொன்டா உள்ளிட்டோர் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்தில், “எனது அன்பான அஜித் காரு, உங்கள் சாதனை ஊக்கமளிப்பதாகவும், பாராட்டத்தக்கதாகவும் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
248 days ago
248 days ago