உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமார் - ராஜு முருகன் இணையும் 'மை லார்ட் '

சசிகுமார் - ராஜு முருகன் இணையும் 'மை லார்ட் '

ஜப்பான் படத்தின் தோல்விக்கு பிறகு ராஜு முருகன் இயக்கும் புதிய படம் மை லார்ட். இந்தப் படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். சைத்ரா ஜே.ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடக்கிறது. இந்நிலையில் 'மை லார்ட் ' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜிப்ஸி ஜப்பான் படங்கள் தோல்விக்கு பிறகு இந்தப் படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார். ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் இந்த படம் அவருக்கு முக்கியமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !