மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
247 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
247 days ago
நடிகர் பிரித்விராஜ் 'லூசிபர்' திரைப்படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிவிட்டார். மோகன்லாலை வைத்து தனது முதல் படத்தை இயக்கிய அவர் மீண்டும் அவரை வைத்து 'ப்ரோ டாடி' என்கிற படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, அஜித்தின் விடாமுயற்சி டிரைலரையும் வெகுவாக பாராட்டி பேசினார். ''நீங்கள் இந்த டிரைலரை பார்த்து விட்டீர்களா என்று தெரியாது.. ஆனால் நான் பார்த்து விட்டேன். தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த டிரைலர்களில் இதுவும் ஒன்று. அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். நிச்சயமாக அடித்து நொறுக்கும் வெற்றியை இந்த படம் பெறும்'' என்று புகழ்ந்துள்ளார்.
தனது பட விழாவில் அஜித்தின் விடாமுயற்சி படம் பற்றி பிரித்விராஜ் புகழ்ந்துள்ளதற்கு காரணம் இருக்கிறது. விடாமுயற்சி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் எம்புரான் பட தயாரிப்பில் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இணைந்து தயாரித்துள்ளது. அந்த நட்பின் அடிப்படையில் பிரித்விராஜ் விடாமுயற்சி டிரைலரை பாராட்டியுள்ளார்.
அது மட்டுமல்ல இந்த நிகழ்வில் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனியும் கலந்து கொண்டார். அவரையும் பிரித்விராஜ் பாராட்டினார். மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மம்முட்டியும் சமீபத்தில் அவர் நடித்த 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தை வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் கவுதம் மேனனும் கூட கலந்து கொண்டனர்.
247 days ago
247 days ago