உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லால்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

மோகன்லால்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்


மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுசுடன் 'மாறன்', விக்ரமுடன் 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்தவர், தற்போது கார்த்தியுடன் 'சர்தார்-2' படத்திலும், பிரபாசுடன் 'ராஜா சாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் மாளவிகா மோகனன். சத்யன் அந்திக்காட் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஹிருதயபூர்வம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !