உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்! - சிவராஜ்குமார் வெளியிட்ட தகவல்

மீண்டும் சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்! - சிவராஜ்குமார் வெளியிட்ட தகவல்


தமிழில் 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு மாத காலமாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிவராஜ்குமார் நேற்று முன்தினம் கர்நாடகா திரும்பினார்.

அதையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, சிவராஜ்குமாரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது மீடியாக்களை சந்தித்து சிவராஜ்குமார், ''புற்றுநோய் என்று மருத்துவர்கள் சொன்னதும் பயந்துவிட்டேன். ஆனால் ரசிகர்களும், நண்பர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து பக்கபலமாக இருந்தார்கள். இப்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமாகி வருகிறேன். அதனால் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி ரசிகர்களை மகிழ்விப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் சிவராஜ் குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !