மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
246 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
246 days ago
பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், கீத்திகா திவாரி, கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
சந்தானம் நடித்து இதற்கு முன்பு 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது பாகமாக இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகி வருகிறது. முதலிரண்டு பாகங்களைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவை கலந்த பேய்ப் படம்தான்.
சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் வெற்றி பெற்றது. அதனால், இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
246 days ago
246 days ago