மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
245 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
245 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
245 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
245 days ago
1952ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் பராசக்தி. இந்த படத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதி இருந்தார். 73 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்திற்கு இந்த பராசக்தி டைட்டிலை வைத்துள்ளார்கள்.
நேற்று மாலை இது குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் படக்குழு வெளியிட்டார்கள். அதேசமயம் விஜய் ஆன்டனியும் தன்னுடைய 25வது படத்தின் தலைப்பை வெளியிட்டிருந்தார். அதில் தமிழ் தலைப்பு சக்தி திருமகன் என்றும், தெலுங்கு தலைப்பு பராசக்தி என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பா என்பது போன்ற குழப்பங்களும் ஏற்பட்டது.
மேலும் விஜய் ஆண்டனி வெளியிட்டிருந்த அறிக்கையில், தனது விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி பராசக்தி என்ற டைட்டிலை தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் பதிவு செய்துவிட்டதாக சொல்லி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். இதற்கிடையே டாக் பிக்சர்ஸ் தாங்கள் இந்த தலைப்பை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள ஆதாரத்தை வெளியிட்டது. இதனால் இந்த பட தலைப்பு யாருக்கு கிடைக்கும் என சிக்கல் நீடித்தது.
இந்நிலையில் இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், தற்போது பராசக்தி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே அது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 73 ஆண்டுகளைத் தாண்டியும் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சரித்திரத் திரைப்படம் 'பராசக்தி'. தமிழ் சினிமாவில் சமூகநீதியை உரக்கப்பேசிய திரைப்படம். அந்த சரித்திரத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பராசக்தி' திரைப்படமும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வருங்கால சந்ததியை ஊக்கப்படுத்தும் திரைப்படமாக இருக்க வேண்டும். இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றி மணிமகுடத்தில் மற்றொரு வெற்றி இறகைச் சூட்டி அழகுபடுத்த ஏவிஎம் குடும்பம் வாழ்த்துகிறது என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து சிவகார்த்திகேயன் படத்திற்குதான் பராசக்தி என்ற தலைப்பை முறைப்படி வாங்கி உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
245 days ago
245 days ago
245 days ago
245 days ago