உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை

சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை

பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா ரவி இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார். இந்த நிலையில் சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 25ம் தேதி அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இது குறித்து தகவலை இப்போது பகிர்ந்துள்ள சினேகன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இறைவா நீ ஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும் மகளே எங்கள் தாயாகவும் இரு தேவதைகள் 25- 1 -2025 அன்று நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !