அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல்
ADDED : 309 days ago
மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் தக்லைப். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடித்து முடித்ததும் ஏஐ என்ற தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த கமல் இன்று(ஜன., 31) சென்னை திரும்பி உள்ளார்.
விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்த கமல், ‛‛தக் லைப் படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது'' என தெரிவித்துள்ளார். அதையடுத்து, விக்ரம் -2 எப்போது தொடங்கும்? என்ற கேள்விக்கு, இப்போது வேறு ஒரு கதையை நான் எழுதிக் வந்திருக்கிறேன்'' என்றார்.
தக்லைப் படத்தை அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார் .