பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு
ADDED : 242 days ago
இயக்குனர் ராம், நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து 'பறந்து போ' எனும் படத்தை உருவாக்கியுள்ளார். அஞ்சலி, அஜூ வர்கிஸ், விஜய் யேசுதாஸ், கிரிஷ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தந்தை, மகன் இடையேயான பாசத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளார் ராம். இதில் சிவா நடுத்தர வயது தந்தை கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார். இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தை 2025ம் ஆண்டிற்காக ரோட்டர் டேம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்துள்ளனர். விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு 23 பாடல்கள் எழுதியுள்ளதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.