மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
216 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
216 days ago
நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனராக மாறி இயக்கிய படம் லூசிபர். மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருந்தது. மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. 2019ல் இந்த படம் வெளியானது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகமாக மீண்டும் பிரித்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் முதல் பாகமான லூசிபர் படத்தை எம்புரான் ரிலீசுக்கு முன்னதாக ரீ ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட லூசிபர் படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் கூறும்போது, எம்புரான் படம் வெளியாகும் இரண்டு வாரங்களுக்கு முன்பு லூசிபர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதனால் இரண்டாம் பாகத்தை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழில் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் தான் இயக்கிய கைதி படத்தையும் ஒரு முறை பார்த்து விட்டு வாருங்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.
216 days ago
216 days ago