மேலும் செய்திகள்
மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர்
231 days ago
புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக்
231 days ago
ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ்
231 days ago
கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானாலும் தனது எளிமையான குணங்களால் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கவர்ந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021 அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதிலேயே அவர் இந்த உலகை விட்டு பிரிந்தது அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீனே நீனே ராஜகுமாரா என்கிற அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பவன் பட் என்பவர் எழுத சுனில் கோஷி என்பவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
231 days ago
231 days ago
231 days ago