உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 'கத்தி' பட வில்லன் நீல் நிதின் முகேஷ்!

நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 'கத்தி' பட வில்லன் நீல் நிதின் முகேஷ்!


பாலிவுட்டில் சுமார் 25 படங்களில் நாயகனாக நடித்திருப்பவர் நீல் நிதின் முகேஷ். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்திருந்தார். இவர், மாதவனுடன் இணைந்து நடித்த 'ஹைசாப் பராபர்' என்ற படம் கடந்த ஜனவரி 24ம் தேதி திரைக்கு வந்தது.

இந்த நிலையில் தனது புதிய ஹிந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்குள்ள நியூயார்க் விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை பார்த்த அதிகாரிகள், பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லையே என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்கள். அதன்பிறகு, தான் ஒரு நடிகர், தனது அப்பா, தாத்தா ஆகியோர் பிரபல பாடகர்கள் என்ற தன்னைப் பற்றிய விஷயங்களை அவர் சொன்ன பிறகு அவற்றை கூகுளில் சர்ச் பண்ணி பார்த்தவர்கள் நீல் நிதின் முகேஷை விடுவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !