நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தை இருந்தால் எப்படியிருக்கும்?: வைரலாகும் ஏஐ போட்டோ
ADDED : 327 days ago
விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினருக்கு உயிர், உலக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்களுக்கு இரண்டு வயது ஆகிறது. அவர்களுடன் தாங்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா, ஏஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த வீடியோவை பார்த்து, சில சமயங்களில் ஏஐ தொழில்நுட்பமும் க்யூட்டாக உள்ளது என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த வீடியோவில் நயன்தாராவுடன் இருக்கும் அந்த இரண்டு குழந்தைகளும் அப்படியே சிறு வயது நயன்தாராவைப் போலவே இருக்கிறது.