நீக் படத்திலிருந்து ‛புள்ள' பாடல் வெளியானது
ADDED : 240 days ago
ராயன் படத்தை அடுத்து குபேரா, இட்லி கடை போன்ற படங்களில் நடித்து வரும் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பவர் நாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இளஞர்களின் காதல் கதையாக உருவாகி உள்ள இப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதோடு காதல் பெயில் என்ற பாடலில் தனுசும், கோல்டன் ஸ்பாரோ என்ற பாடலில் பிரியங்கா மோகனும் நடனமாடியுள்ளார்கள். தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புள்ள என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாடலை தனுஷ் எழுத, ஜிவி பிரகாஷ் பாடி உள்ளார்.