மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
237 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
237 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
237 days ago
அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் நாளை வெளியாக உள்ளது. ஹாலிவுட் படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவலாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். அதனால், ஏற்பட்ட சிக்கலால்தான் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடாமல் மூன்று வாரங்கள் கழித்து வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அஜித்திற்கு 100 கோடி சம்பளம், திரிஷாவுக்கு 6 கோடி, அர்ஜுன் 6 கோடி, ரெஜினா 1 கோடி, ஆரவ் 50 லட்சம், அனிருத்துக்கு 8 கோடி, இயக்குனர் மகிழ் திருமேனிக்கு 4 கோடி என சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இவற்றோடு படத்தின் தயாரிப்பு செலவு, ஹாலிவுட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமைத் தொகை என மொத்தமாக 250 கோடி முதல் 275 கோடி வரை ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.
இப்படத்தின் ஓடிடி உரிமை மட்டும் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. சாட்டிலைட் உரிமை இதர உரிமை மூலம் 50 கோடி வரை கிடைக்கலாம். தியேட்டர் உரிமை 75 கோடிக்கு விற்கப்பட்டிருக்கலாம். தியேட்டர்கள் மூலம் மட்டுமே எப்படியும் 300 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இவை கோலிவுட்டில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்.
237 days ago
237 days ago
237 days ago