சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ்
ADDED : 256 days ago
நடிகர் சத்யராஜ் ஒரு காலகட்டத்தில் தமிழில் கதாநாயகனாக பல வெற்றி படங்களில் நடித்து கலக்கியவர். அதன் பின்னர் குணச்சித்ர வேடத்தில் நடித்து வந்தார். சில ஆண்டுகளாக தமிழை கடந்து தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தற்போது ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் இணைந்து நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.