உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம்

எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம்

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ள படம் எம்புரான். இவர்களின் முதல் படமான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடித்த அனுபவங்கள் குறித்தும் மோகன்லாலை இயக்கிய அனுபவங்கள் குறித்தும் மோகன்லால், பிரித்விராஜ் இருவரும் மாறி மாறி மீடியாக்களில் பேட்டி அளித்து வருகின்றனர்..

இந்த நிலையில் பிரித்விராஜ், மோகன்லால் ஆகியோருடன் பஹத் பாசிலும் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை மோகன்லாலே வெளியிட்டார். இதனை தொடர்ந்து எம்புரான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருக்கிறார் என்றும் அது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு செய்தி பரவத் துவங்கியது. இன்னொரு பக்கம் பிரித்விராஜ் தொடர்ந்து மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கி விட்டதால் அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் பஹத் பாசிலை நாயகனாக வைத்து இயக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !