உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு

முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு மாமன்னன் படத்தில் நடித்த குணச்சித்ர வேடம் அவரை பேச வைத்தது. தற்போது பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக சர்தார்-2 வை அடுத்து கார்த்தி நடிக்கும் அவரது 29வது படத்தில் நடிக்க போகிறார் வடிவேலு. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் இந்த படத்தில் மாமன்னன் படத்தைப் போன்று காமெடி அல்லாத ஒரு குணச்சித்ர வேடத்தில் மீண்டும் நடிக்க போகிறாராம் வடிவேலு. அதோடு முதன்முறையாக கார்த்தி உடன் இணைந்து நடிக்க போகிறார் வடிவேலு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !