உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா

ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா

தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தியில் வெப் சீரியலில் நடித்து வருகிறார் சமந்தா. இந்த நேரத்தில் தற்போது மேகஸினின் அட்டைப்படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தில் போட்டோசூட் நடத்தியுள்ளார் சமந்தா. கருப்பு நிறத்தில் உடையணிந்து தன்னுடைய ஹேர் ஸ்டைலை ஆண்களைப் போன்று மாற்றியுள்ள அவர், ஹாலிவுட் நடிகைகள் போன்று தோற்றமளிக்கிறார். அந்த அளவுக்கு இந்த கெட்டப்பில் அவர் ஆளே மாறி போயிருக்கிறார். ஹாலிவுட் படங்கள், வெப் சீரியல்களில் நடிக்கும் முயற்சியாக இந்த போட்டோசூட்டை அவர் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் இருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகளும் ஹாலிவுட் படங்கள், வெப் சீரியலில் கால்பதித்த நிலையில் விரைவில் சமந்தாவும் அந்த பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !