மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
210 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
210 days ago
1982ம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட படம் 'மூன்றாம் பிறை'. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க்ஸ் ஸ்மிதா நடித்த படம். திரையுலகம் அதுவரை சந்திக்காத ஒரு கதையை கொண்ட படமாக வெளிவந்தது. நாகரீக பெண்ணான ஸ்ரீதேவி ஒரு விபத்தில் சிக்கி 10 வயது சிறுமியின் வாழ்க்கைக்கு வந்து விடுகிறார். அவரை பள்ளி ஆசிரியர் கமல்ஹாசன் வளர்க்கிறார். ஸ்ரீதேவியின் பெற்றோருக்கு விபரம் தெரிந்து அவரை அழைத்துச் செல்ல வருகிறார்கள், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை.
இந்த படத்திற்கு 30வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகர் கமல்ஹாசன், சிறந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்ற இரண்டு விருதுகள் கிடைத்தன. படத்தில் பிரமாதமாக நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கிடைத்தது கமல்ஹாசனுக்கு. கதைப்படி ரயில் நிலையத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி தவிர படத்தில் கமலுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது ஸ்ரீதேவி புறக்கணிக்கப்பட்டு கமலுக்கு வழங்கப்பட்டது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து அளித்த விளக்கத்தில் “ஆண் நடிகர்கள் என்ற கேட்டகிரியில் கமல்ஹாசன் முன்னணியில் இருந்தார். படம் முழுக்க அன்பை மனதில் தேக்கி வைத்து அதை கிளைமாக்சில் வெளிப்படுத்திய விதத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பெண் நடிகைகளுக்கான பிரிவில் ஸ்ரீதேவி பிரமாதமாக நடித்திருந்தாலும், அவரை விட 'அர்த்' படத்தில் ஷபனா ஆஸ்மி சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது.
என்றாலும் சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி என 6 விருதுகளும் வழங்கப்பட்டன.
210 days ago
210 days ago