வீரம் படத்தினால் என கேரியர் பாதிப்பு ஆனது : மனோ சித்ரா
ADDED : 264 days ago
தமிழில் அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மனோ சித்ரா. அதன் பிறகு நீர் பறவை, வீரம் மற்றும் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக சினிமாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்மறையாக அமைந்தது.
தற்போது மனோ சித்ரா அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சினிமா பயணத்தில் ஏற்பட்ட தொய்வு குறித்து பேசியதாவது, வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியில் இறந்துவிடுவார். அதன் பின் நீங்கள் தான் அஜித்திற்கு ஜோடி என்றனர். அதன்பிறகு தான் தெரியும் அது பொய் என்று. ஆனாலும் அஜித் சாருக்காக தான் நான் நடித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை பாதிப்படைந்தது என தெரிவித்துள்ளார்.