ராஜமவுலி படத்தில் கீ ரோலில் நடிக்கும் நானா படேகர்!
ADDED : 297 days ago
ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து தற்போது மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார் ராஜமவுலி.
இந்நிலையில் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கீ ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர் நானா படேகரை மகேஷ்பாபுவின் தந்தை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமவுலி. இதற்க்கான டெஸ்ட்ஷூட் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி இன்னும் சில நடிகர் நடிகைகளின் டெஸ்ட்ஷூட் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறாராம் ராஜமவுலி.