மீண்டும் விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!
ADDED : 258 days ago
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படமாக 'ஜனநாயகன்' படத்தை அறிவித்து நடித்து வருகிறார். பாபி டியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே. வி. என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன் விஜய்யின் புலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.