'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 257 days ago
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் . இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ந் தேதி அன்று திரைக்கு வருகிறது.
இதனால் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற பிப்ரவரி 10ந் தேதி அன்று வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.