உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி!


நடிகர் சிம்பு, ‛தக் லைப்' படத்தில் நடித்து முடித்து அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவரது 49வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிம்பு கல்லூரி பேராசிரியர் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சு வார்த்தையை தொடங்கி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், சாய் பல்லவி அவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்தே தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !