உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு சென்று சுரேஷ்கோபி நினைவஞ்சலி

எம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு சென்று சுரேஷ்கோபி நினைவஞ்சலி


மலையாள திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பிரபல எழுத்தாளராகவும் கதாசிரியராகவும் திரைப்பட இயக்குனராகவும் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் எம் டி வாசுதேவன் நாயர். குறிப்பாக ஒரு வடக்கன் வீரகதா, பழசிராஜா உள்ளிட்ட சரித்திர படங்கள் இவரது கதையில்தான் உருவாகின. கடந்த டிசம்பர் மாதம் தனது 91வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் எம் டி வாசுதேவன் நாயர். இந்த நிலையில் அவரது கதையில் உருவான ஒரு வடக்கன் வீரகதா திரைப்படம் 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த பிப்ரவரி 7ம் தேதி டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் சந்து என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். ஆரோமல் என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சுரேஷ்கோபி நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சராகவும் இருக்கும் நடிகர் சுரேஷ்கோபி கோழிக்கோடு கொட்டாரம் பகுதியில் உள்ள எம்.டி வாசுதேவன் நாயரின் இல்லத்திற்கு நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அங்கிருந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “ ஒரு வடக்கன் வீர கதா திரைப்படம் இன்னும் 30 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை திரையரங்குகளில் வெளியாகும். அந்த அளவிற்கு காலத்தால் அழிக்க முடியாத காவியம் அது” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !