விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா
இந்திய மாடல் உலகில் முன்னணியில் இருப்பவர் ஆராத்யா தேவி. ராம்கோபால் வர்மா இயக்கிய 'சாரி' என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார். அதோடு சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான படங்களை வெளியிடுவதன் மூலம் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல புகைப்பட கலைஞர் நவீன் கல்யான் ‛அனிமல் ஆராத்யா' என்ற பெயரில் ஆராத்யாவை வைத்து போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அதனை ஆல்பமாக வெளியிட்டுள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டார்.
நிகழ்வில் ராம் கோபால் வர்மா பேசும்போது இதுபோன்ற புகைப்படங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பு. இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அனைவரையும் கவரும் வகையிலும் தீமில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு விலங்கின் வலிமை, சுதந்திரம் மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் வெவ்வேறு அம்சத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது என்றார்.