தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, பாயும் ஒளி நீ எனக்கு, ரெய்டு படத்தில் நடித்தார். அதன்பிறகு 'இறுகப்பற்று' படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
மாஸ்டர், லியோ, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், இந்த படம் உருவாகிறது. அவரது மகன் எல்.கே.அக்ஷய் குமாரும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின், இணை இயக்குநரான சுரேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தப்படத்தின் கதையை 'டாணாக்காரன்' புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதி செய்கிறார். தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.