உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?

விஜய்யுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?


எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன்'. அவருடன் பூஜாஹெக்டே, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் அன்று தேதியை மாற்றி விட்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'பராசக்தி' படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் தற்போது விஜய் படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால், இது உறுதியாகும் பட்சத்தில் விஜய் படத்துடன் மோதாமல் 'பராசக்தி' படத்தை பொங்கலுக்கு முன்கூட்டியே வெளியிட இயக்குனர் சுதா திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !