உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்!

அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்!


'பலே வெள்ளையத் தேவா' என்ற படத்தில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், அதன் பிறகு 'பிருந்தாவனம், கருப்பன், ரசவாதி' உட்பட பல படங்களில் நடித்தவர், தற்போது அருண் விஜய்க்கு ஜோடியாக 'ரெட்டை தல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருடன் ஜோடி சேர்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.

குத்துச்சண்டை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய முத்தையா இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !