உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: போர் படங்களை தயாரிக்க உத்தரவு போட்ட அரசு

பிளாஷ்பேக்: போர் படங்களை தயாரிக்க உத்தரவு போட்ட அரசு


உலகையே புரட்டிப்போட்ட இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நடந்தது. உலக நாடுகள் அனைத்தும் ஆக்சிஸ் நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரிகளாக உருவாகி போராடியது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். 2 அணு குண்டுகள் வீசப்பட்டது. சுமார் 10 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர்.

அப்போது இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதனால் ஆங்கிலேயர்களின் சார்பில் இந்திய வீரர்களும் போரில் பங்கேற்று லட்சக்கணக்கில் உயிர் இழந்தனர். இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் மக்கள் பயத்தில் வாழ்ந்தனர். அதுவும் சென்னை மீது ஜப்பான் எம்டன் குண்டு வீசிய பிறகு தமிழ் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தனர். இந்த நேரத்தில் ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த தமிழ்நாடு அரசு, தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், மக்களின் அச்சத்தை போக்கும்படியான போர் தொடர்பான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்றும், அந்த படங்கள் மக்களுக்கு போர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், போர் வீரர்களின் வீரம், தியாகம் பற்றி பேச வேண்டும், போரின் அவசியம் பற்றி பேச வேண்டும், இந்த போர் எதற்காக நடக்கிறது என்பதை பற்றி சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டடது. இதை தொடர்ந்து அன்றைக்கு முன்னணியில் இருந்த மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம், ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனங்கள் போர் தொடர்பான படங்களை தயாரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !