25வது படத்தை தொட்ட கிருஷ்ணா
ADDED : 248 days ago
தயாரிப்பாளர் ‛பட்டியல்' சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பியுமான கிருஷ்ணா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். 'அலிபாபா' என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன், யாக்கை, ராயர் பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது அவர் சில படங்களையும், வெப் தொடர்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தனது 25வது படத்திற்கு வந்திருக்கிறார். படத்திற்கு தற்காலிகமாக 'கேகே25' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் பால கிருஷ்ணன் இயக்குகிறார். படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.