மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
205 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
205 days ago
கடந்த 2023ல் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்த மைக்கேல் திரைப்படம் வெளியானது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார். கேங்ஸ்டர் பின்னணியில் பழிவாங்கல் கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த பிப்ரவரி 14 முதல் சிம்ப்ளி சவுத் என்கிற ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படம் உலகெங்கிலும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு ஆனாலும் கூட இந்தியாவில் மட்டும் ஓடிடி தளங்களில் இதை பார்க்க முடியாது என்று அந்த ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தகவல் எதுவும் வெளியிடவில்லை.
205 days ago
205 days ago