காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை
ADDED : 251 days ago
இலக்கியா, இதயத்தை திருடாதே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை மூலம் பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது கவுண்டமணி நடித்துள்ள ' ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வருகிறார்.
இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக உருவாகி வரும் காஞ்சனா 4ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிமா பிந்து படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இப்படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் மூலம் மணிஷா தயாரிக்கின்றனர்.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா பதேகி நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது..