உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாட்ரிக் வெற்றியில் ராஷ்மிகா மந்தனா

ஹாட்ரிக் வெற்றியில் ராஷ்மிகா மந்தனா

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கில் நுழைந்து அங்கும் வெற்றி பெற்று, தற்போது ஹிந்தியிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான், வாரிசு' படங்களில் நடித்தவர் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் 'குபேரா', ஹிந்தியில் தயாராகும் 'சிக்கந்தர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா நடித்து கடந்த வாரம் வெளிவந்த ஹிந்திப் படமான 'சாவா' வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியுடன் சேர்த்து ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.

2023ல் அவர் ஹிந்தியில் கதாநாயகியாக நடித்து வெளிவந்த 'அனிமல்' படம் 900 கோடியை வசூலித்தது. அடுத்து கடந்த 2024ம் வருடம் வெளிவந்த 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமா வசூலித்து சாதனை புரிந்தது. தற்போது 2025ல் அவரது முதல் வெளியீடான 'சாவா' படம் 100 கோடியைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் வெளியாக உள்ள 'குபேரா, சிக்கந்தர்' ஆகிய படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், இந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ராஷ்மிகா வசூல் நாயகி எனப் பெயர் பெற்றுவிடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !