உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுண்டமணிக்கு போட்டியாக தாதாவாக களமிறங்கும் செந்தில்

கவுண்டமணிக்கு போட்டியாக தாதாவாக களமிறங்கும் செந்தில்

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் கவுண்டமணி லீடு ரோலில் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்நிலையில் சாய் பிரபா மீனா இயக்கத்தில் முரளி பிரபாகரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜை உடன் துவங்கியது. இதில் செந்தில் உடன் கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோனி, மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன்,சென்ராயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் சாய் பிரபா மீனா கூறுகையில், ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் என்ற போட்டி 4 கேங்ஸ்டர் குழுக்களிடையே நடக்கிறது. அதில் வென்றது யார்? என்பது தான் படத்தின் கதை. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திருப்பங்களுடன், கமர்சியல் படமாக இதை உருவாக்க இருக்கிறோம் என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கோவா போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !