படுதோல்வி அடைந்த 'லவ் டுடே' ஹிந்தி ரீமேக்!
ADDED : 274 days ago
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான படம் 'லவ் டுடே'. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை செய்தது. இதன் காரணமாகவே அடுத்தபடியாக தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் இந்த 'லவ் டுடே' படத்தை ஹிந்தியில் 'லவ்யபா' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அமீர்கானின் மகன் ஜுனைத்கான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். இந்த படம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால், 60 கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட இந்த படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் இதுவரை 6.8 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்துள்ளது.