உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர் ஹீரோ கதையில் நிவின் பாலியின் 'மல்டிவெர்ஸ் மன்மதன்'

சூப்பர் ஹீரோ கதையில் நிவின் பாலியின் 'மல்டிவெர்ஸ் மன்மதன்'


தற்போது ராம் இயக்கி உள்ள 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் நடித்துள்ளார் நிவின் பாலி. சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை அடுத்து 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' என்ற படத்தில் நடிக்கும் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து 'மல்டிவெர்ஸ் மன்மதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க போகிறார் நிவின்பாலி. இந்த படம் சூப்பர் ஹீரோ கதையில் உருவாகிறது. ஆதித்யன் சந்திரசேகர் என்பவர் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !