மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
226 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
226 days ago
பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கண்ணன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கே.பாக்யராஜ், சுதாகர், கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் பின்னாளில் புகழ்பெற்றார்கள். ஆனால் காதல் ஓவியம் படம் தோற்றதால் அதில் நடித்த கண்ணனால் சினிமாவில் வெற்றிபெற முடியவில்லை. அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது தொழிலதிபராக இருக்கும் கண்ணன் 'சக்தி திருமகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இந்த படத்தை இயக்குகிறார்.
விஜய் ஆண்டனி நடிக்கும் 25வது படம் இது. விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன், கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார், ஷெல்லி ஒளிப்பதிவு செய்கிறார்.
226 days ago
226 days ago