மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
226 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
226 days ago
ஆஸ்கர் விருதுக்கு இணையான விருது வழங்கும் விழா பாப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்). ஆண்டுதோறும் இந்த விருது விழா லண்டனில் நடக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான 78வது விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது.
இந்த விருது விழாவில் வாடிகன் நாடகத் திரைப்படம் 'கான்கலேவ்' நான்கு விருதுகளை வென்றது, சிறந்த படம் மற்றும் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த எடிட்டிங், ஆகிய விருதுகள் இதில் அடங்கும். பாயல் கபாடியாவின் 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' இந்திய திரைப்படம் விருது எதையும் பெறவில்லை.
'தி புருடலிஸ்ட்' படத்தை இயக்கிய பிராடி கோர்பெட் சிறந்த இயக்குனராகவும், அந்த படத்தில் நடித்த அட்ரியன் பிராடி சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடிகை விருது 'எனோரா' படத்தில் நடித்த மிக்கி மேடினுக்கு வழங்கப்பட்டது. 'எ ரியல் பெய்ன்' படத்தில் நடித்த கீரன் கல்கின் சிறந்த துணை நடிகர் விருதையும், 'எமிலியா பெரெஸ்' படத்தில் நடித்த ஜோ சால்டனா சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றனர். ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் ஸ்பானிஷ் மொழி படமான 'எமிலியா பெரெஸ்' விருது பெற்றது.
226 days ago
226 days ago