மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
227 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
227 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
227 days ago
எம்ஆர் பிக்சர்ஸ், ஏ.மகேந்திரன் தயாரிக்கும் படம் 'லவ் இங்க்' . இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். மலையாள நடிகையான டெல்னா டேவிஸ், 'விடியும் வரை பேசு' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். அதன்பிறகு '49ஓ' படத்தில் நடித்தார். கடைசியாக 2017ம் ஆண்டில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தில் நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றவர் அன்பே வா, அபியும் நானும், கண்ணான கண்ணே தொடர்களில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இதில் நடிகர்கள் சுனில் ரெட்டி, யோகிபாபு கேபிஒய் புகழ் ராமர் மற்றும் ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர். மேகராஜ் தாஸ் இயக்குகிறார். அர்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே சரியான திட்டமிடல் இருந்ததால் எளிதில் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்தது. படம் பீல்-குட் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகிறது என்றார்.
227 days ago
227 days ago
227 days ago