மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
226 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
226 days ago
இயக்குனர், நடிகர் விசு குடும்ப பாங்கான படங்களையே எடுத்துள்ளார். ஆனால் அவர் படத்துக்கே தணிக்கை குழு 87 கட் கொடுத்தது. 'மணல்கயிறு' படத்திற்கு பிறகு விசு இயக்கிய படம் 'டௌரி கல்யாணம்'. இந்த படத்தில் விசுவுடன் விஜயகாந்த், ஸ்ரீவித்யா, எஸ்.வி.சேகர், அருணா, விஜி, கிஷ்மு, புஷ்பலா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சாருசித்ரா பிலிம்ஸ் சார்பில் பி.சுசீலா தயாரித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
ஒரு அண்ணன் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் ராவுத்தர் என்ற முஸ்லிம் கேரக்டரில் நம்பியார் நடித்திருந்தார். தமிழ்நாட்டில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் ராவுத்தர் என்று அழைக்கப்படுகிறார்கள். தென் தமிழ் நாட்டில் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால் ராவுத்தர் கேரக்டரில் நடித்த நம்பியார் வடநாட்டு சேட்டு போன்று இந்தி கலந்த தமிழ் பேசி நடித்தார்.
இதனால் இந்த கேரக்டர் சித்தரிப்பு சரியில்லை என்று கூறி படத்திற்கு நம்பியார் நடித்த காட்சிகள், பேசிய வசனங்கள் என்று 87 இடத்தில் கட் கொடுத்தது தணிக்கை குழு. இதனை சற்றும் எதிர்பார்க்காத விசு படத்தில் ஒரு காட்சியை இணைத்து ராவுத்தர் கதாபாத்திரத்தை சரி செய்தார். அவர் சில காலம் வடநாட்டில் இருந்ததாகவும் அதனால் இந்தி கலந்து பேசுவதாகவும் ஒரு காட்சி வைத்து அதன் பிறகு படத்தை தணிக்கைக்கு கொண்டு சென்றார். ஒரு கட்கூட இல்லாமல் தணிக்கை சான்று வழங்கப்பட்டது.
226 days ago
226 days ago