மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
199 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
199 days ago
ஒரு கையில் மதுக் கோப்பை, மறு கையில் தாய்ப்பால் 'பம்ப்' வைத்துக் கொண்டு ராதிகா ஆப்தே வெளியிட்ட போட்டோ பல்வேறு கமெண்ட்டுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
'கபாலி' பட நடிகையான ராதிகா ஆப்தே எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவருக்கு விருப்பமானவற்றை செய்யும் குணம் கொண்டவர். இதற்கு முன்பும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு ராதிகா ஆப்தே கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாக லண்டனில் நடைபெற்ற 'பாப்டா' விருது விழங்கும் விழா அமைந்தது. அதில் கலந்து கொண்ட போது ராதிகா ஆப்தே, “பாப்டா'வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். எனது தாய்ப்பாலை பம்ப் செய்யும் நேரத்தில் நிகழ்ச்சி நேரம் இருந்தது. நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த நடாஷா நான் தாய்ப்பாலை பம்ப் செய்ய வாஷ்ரூமிற்கு கூடவே வந்தார், அதோடு ஷாம்பெயினையும் கொண்டு வந்தார். ஒரு புதிய அம்மாவாக இருப்பதும், வேலை செய்வதும் கடினம். இந்த அளவிலான கவனிப்பு நமது திரைப்படத் துறையில் அரிதானது, மிகவும் பாராட்டத்தக்கது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவின் இந்தப் பதிவும், புகைப்படமும் ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறது.
199 days ago
199 days ago