ஜி.டி. நாயுடு படத்தில் இணைந்த பிரபலங்கள்
ADDED : 275 days ago
நடிகர் மாதவன் சமீபத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை 'ராக்கெட்டரி' எனும் படமாக இயக்கி நடித்திருந்தார். இதையடுத்து மாதவன் இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கிய இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றில் நடிக்கின்றார். இப்படத்தை கிருஷ்ண குமார் ராமகுமார் இயக்குகிறார். இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கடந்த வாரத்தில் இதன் படப்பிடிப்பும் துவங்கியது. தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மாதவனுடன் இணைந்து ஜெயராம், பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.