சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு திருமணம்
ADDED : 275 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' என்ற தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மான்சி ஜோஷி. இந்த தொடருக்கு பின் 'மிஸ்டர். மனைவி' தொடரில் வில்லியாக நடித்து வந்த மான்சி, ஒரு காலக்கட்டத்தில் அந்த தொடரிலிருந்து விலகினார். அதன்பின் எதிலும் கமிட்டாகாத அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார். சென்ற வருட இறுதியில் இவருக்கு ராகவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது இவரது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளை குவித்து வருகிறது.